கைதிகள் படுத்துறங்க மெத்தைகள்!
Tuesday, March 22nd, 2016
இதுவரை காலமும் சிறைக் கைதிகள் படுத்துறங்க வழங்கப்பட்ட பாய்களுக்கு பதிலாக மெத்தைகள் வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலகுவாக உபயோகப்படுத்தும் வகையில் இந்த மெத்தைகள் கைதிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் குறித்த மெத்தைகளை சிறைச்சாலைகள் திணைக்களமே தயாரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
இதன் முதற் கட்டமாக கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதனை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த மெத்தைகள் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
குடாநாட்டில் 6 பேருக்கு எச்.ஜ.வி தொற்று! -வைத்தியர் தாரினி குருபரன் தெரிவிப்பு!
தற்போதைய ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது - பிரதமர் தினேஷ் குணவர்த்தன உறுதிபடத் தெரிவிப்பு!
அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை வடக்கு மாகாணம் உரிய வகையில் செலவு செய்வதில்லை - மத்திக்கு ஏன் ...
|
|
|


