டெங்கு நோயாளர்கள் அதிகரிக்க கூடும் – டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு!
Friday, May 15th, 2020
நாட்டில் எதிர்வரும் சில வாரங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரிக்க கூடும் என்பதால் நாட்டின் தென்மேற்கு பகுதியில் வாழும் மக்கள் இது தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் டெங்கு நோய் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் என அதன் பணிப்பாளர், மருத்துவர் அநுர ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றுதியானவர்கள் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் டெங்கு நோயாளர்களுக்கு என அங்கு ஒரு பகுதி ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடபகுதி கடற்றொழில் துறையை மேம்படுத்துவதே எமது நோக்கம் - கடற்றொழில் நீரியல் வழத்துறை அமைச்சின் செயலா...
பாடசாலை மாணவர்கள் 18 இலட்சம் பேருக்கு போஷாக்கான பகல் உணவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை - விவசாய அமைச்...
பசியை போக்க முந்திரி பழங்களை பறித்த ஒருவர் சுட்டுக் கொலை!
|
|
|


