எதிர்வரும் 11 ஆம் திகதிமுதல் ஊரடங்டகுச் சட்டத்தை கட்டுப்பாடுகளுடன் தளர்க்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்பு!
Thursday, May 7th, 2020
சமூக இடைவெளியை பேணும் வகையில் நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள ஊரடங்கை எதிர்வரும் 11 ஆம் திங்கட்கிழமை கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் தளர்க்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணித்துள்ளார்.
மேலும் கொரோனா அபாய வலயங்களாகக் கருதப்படும் மாவட்டங்களில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய மக்கள் செயற்படவேண்டும் எனவும், அதற்கான வேலைத்திட்டங்களை சுகாதார அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் சுகாதார அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நடத்திய பேச்சுகளின்போதும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சனிக்கிழமையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திறக்கப்படும்!
அரசுக்கு சொந்தமான மேலும் ஒரு எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்க நடவடிக்கை!
இராமேஸ்வரம் - தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வு!
|
|
|


