அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும் கொரோனா – ஒரோ நாளில் மீண்டும் 2350 பேர் பலி!
Wednesday, May 6th, 2020
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக அமெரிக்காவில் நேற்றையதினம் மட்டும் 2 ஆயிரத்து 350 பேர் பலியாகியுள்ளனர்.
உலகளவில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை தொடர்ந்தும் நிலைகுலையச் செய்துவருகின்றது.
கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் குறைந்துவந்த உயிரிழப்புக்கள் மீண்டும் நேற்றையதினம் 2350 ஆக உயர்ந்தமையால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்துள்ளது.
கொரோனா வைரஸின் பாதிப்பு மற்றும் உயிரிழப்புக்களில் உலகளவில் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸின் காரணமாக அமெரிக்காவில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 72ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 12 இலட்சத்து 37 ஆயிரத்து 633 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதுடன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 271 ஆகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விண்வெளியில் இருந்து அணு ஆயுதம் வீசுவோம்: ரஷ்யா!
காட்டுத் தீ: கலிஃபோர்னியா 1,000 வீடுகள் நாசம்!
மூன்றாம் உலகப்போர் தொடர்பில் ரஷ்யா எச்சரிக்கை - ஐக்கிய நாடுகளின் செயலாளர் ரஷ்ய ஜனாதிபதியை சந்திப்பு!
|
|
|


