பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான அனைத்து உதவிகளும் செய்யத்தயார் -! சுகாதார சேவை பணிப்பாளர்!
Wednesday, April 22nd, 2020
இலங்கையில் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்க முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –
தேர்தல் நடத்த முடியுமா இல்லை என்பதனை கூறுவது எங்கள் செயற்பாடு அல்ல. அது தேர்தல் ஆணைக்குழுவினால் எடுக்கும் தீர்மானம்.
எனினும் தேர்தல் நடத்துவதென்றால் அதற்கு அவசியமான அனைத்து ஆதரவினையும் வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஒரே நாளில் அதிகமான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நாளில் அவர் இந்த தகவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதிட்டின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இரண்டாம் நாள் அமர்வில் ஜனாதிபதி !
ஊரடங்கு காலத்தில் நோயாளர்களுக்கு மருந்து விநியோகம் - சுகாதார அமைச்சும் தபால் திணைக்களமும் இணைந்து மீ...
பரீட்சை திணைக்களத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


