இலங்கை கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் மகிழ்ச்சியான நிலையில் உள்ளது – ஒன்று கூடினால் ஐரோப்பாவை போன்று பேரிடரை சந்திக்க நேரிடும் – IDH வைத்தியசாலை வைத்தியர் எச்சரிக்கை!

Tuesday, April 14th, 2020

இலங்கையினுள் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலானது இதுவரையில் மகிழ்ச்சிகரமான மட்டத்தில் உள்ளதாக கொழும்பு IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அத்துடன் வழமையான வாழ்க்கை முறைக்கு எப்போது வருவதென்பதனை பொது மக்களின் செயற்பாட்டிற்கமையவே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினை முழுமையாக இல்லாமல் செயற்வதற்கு பொது மக்கள் தொடர்ந்து சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ள அவர் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஒன்று கூடினால் அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா நாடுகளை போன்று பாரிய ஆபத்தினை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts:

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் சிலவற்றில் மாற்றம் செய்ய நேரிடலாம் - என பிரதி சுகாத...
சமையல் எரிவாயு சிலின்டர் தட்டுப்பாட்டிற்கு இன்னும் 6 நாட்களுக்குள் தீர்வு - லிட்ரோ காஸ் நிறுவனத்தின்...
தேர்தல் உறுதிமொழிக்கு அமைய நாடு முழுவதும் தேசிய பாடசாலைகள் அமைக்கப்படும் - கல்வி அமைச்சர் தினேஷ் குண...