கொரோனா வைரஸ்: இத்தாலியில் 100 வைத்தியர்கள் பலி!
Friday, April 10th, 2020
உலக அளவில் கொரோனா வைரஸூக்கு அதிகம்பேர் பலியான நாடாக இத்தாலி திகழ்கிறது. இந்நிலையில், இன்னொரு அதிர்ச்சிகரமான தகவலாக, இத்தாலியில் கொரோனாவுக்கு இதுவரை 100 வைத்தியர்கள் பலியானதாக தெரிய வந்துள்ளது. இவர்களில், ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் வேலையில் சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியர்களும் அடங்குவர் என அந்நாட்டு சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது. இதுபோல், 30 தாதிகள் மற்றும் மருத்துவ உதவியாளர்களும் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர், மருத்துவ துறையில் பணியாற்றுபவர்கள் என்ற தகவலை மற்றொரு அமைப்பு வெளியிட்டுள்ளது.
Related posts:
துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு : அருட்தந்தை ஃபேதுல்லா ஹியூலென் மீது குற்றச்சாட்டு!
பாடசாலைகளில் தொடர்ச்சியாக நீர் விரயமாவதைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை - சுற்றறிக்கையை வெளியிட கல்...
ரஷ்யாவுக்கு அருகே அதிசக்தி வாய்ந்த நில அதிர்வு – பல நாடுகளுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை!
|
|
|


