நேற்று பரிசோதிக்கப்பட்ட 15 பேருக்கும் கொரோனா இல்லை – யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்!
Tuesday, April 7th, 2020
யாழ்ப்பாணத்தில் நேற்று பரிசோதிக்கப்பட்ட 15 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் 8 பேருக்கும் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கும் நேற்றுப் பகல் ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவர்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, யாழ்ப்பாணத்தில் இதுவரை 7 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் வைத்தியர் சத்தியமூர்த்தி மேலும் கூறினார்.
Related posts:
தொடர் மழையால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!
தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்!
முன்னாள் காவலாளி பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டம்!
|
|
|
ஊரடங்கை தளர்க்கும் முன் உலக நாடுகள் கவனம் கொள்ள வேண்டும் – எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்ப...
மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால் முடக்க கட்டுப்பாடுகள் பயனற்றதாகிவிடும் - இராஜாங்க அம...
தமிழரது தீர்வு விடயத்தில் அக்கறையுடன் இருக்கின்றேன் – இலண்டனில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவிப்...


