29 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகம்?
Tuesday, March 31st, 2020
கொரோனா வைரஸ் சந்தேகத்தில் சுமார் 29 சிறுவர்கள் கொழும்பு சிறுவர் மருத்துவமனையான பொறளை லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இலங்கையில் பல்வேறு மருத்துவமனைகளில் இதுபோன்ற பல சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட முதலாவது குழந்தை நேற்றையதினம் இனங்காணப்பட்டது. குருநாகல் நாத்தண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த குழந்தையின் பாட்டனார் அண்மையில் இந்தியா சென்றுவந்ததை அடுத்து அவருக்கு கொரோனா சந்தேக அறிகுறிகள் காணப்பட்டதை அவர் உட்பட அந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
இன்றும் 8 மணி தொடக்கம் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில்!
MCC ஒப்பந்தம் மீள் பரிசீலனை செய்யப்படும் - சட்டமா அதிபர்!
அவதானத்துடன் செயற்பட வேண்டும் - இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் எ...
|
|
|


