அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அச்சம்!
Monday, March 23rd, 2020
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பணிகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளில் தட்டுப்பாடு நிலவுகிறது.
உடனடியாக இந்த பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்படாது போனால் நாடளாவிய ரீதியில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், முன்னிலை சுகாதார பணியாளர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் தொழிற்சங்க தலைவரான எஸ்.பி.மெடிவத்த இது தொடர்பாக தகவல் தருகையில்,
சுகாதார பணியாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
தேசிய பாடசாலை அதிபர் பதவி வெற்றிடங்கள் எப்போது நிரப்பப்படும்? - கல்வி அமைச்சரிடம் கோரிக்கை!
இலங்கையில் காதலர் தினத்தை முன்னிட்டு கடுமையாகும் சட்டம் – 'காதலுக்கு ஒரு மரம்' நடும் திட்டத்தை அறிமு...
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும் வயர்களும் பொலிசாரால் மீட்பு!
|
|
|


