மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை – அரசாங்கம்!
Tuesday, March 17th, 2020
இன்றுமுதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் வேலைதிட்டத்திட்டத்திற்கு அமைய இந்த விடுமுறையை நீடிப்பதற்கு அல்லது நீடிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
Related posts:
சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுக்களுக்கு இடையில் சந்திப்பு!
கோதுமை மா விலை அதிகரிப்பு - உறுதிப்படுத்தியது ப்றீமா நிறுவனம் !
இலங்கையை நோக்கி படையெடுக்கும் ரஷ்யர்கள் - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
|
|
|


