6 கிலோ கிராம் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!
Sunday, July 24th, 2016
உடுவில் பிரதேசத்தில் 6 கிலோ கிராம் ஹெராய்னுடன் அளவெட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (23) இரவு மதுவரி திணைக்கள அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இரகசிய தகவல் ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், பருத்தித்துறை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை விதிப்பு!
சிக்கா வைரஸ் தொடர்பான அவசர நிலை முடிந்தது - உலக சுகாதார அமைப்பு!
ஆபத்தான நபர்கள் மற்றும் அவர்கள் தொடர்பான தகவல் வழங்கினால் பணப்பரிசு - புலனாய்வு பிரிவு தகவல்!
|
|
|


