தனியார் வகுப்புகளுக்கு தற்காலிக தடை – வடமாகாண ஆளுநர்!
Friday, March 13th, 2020
இன்றுமுதல் இரண்டு வாரங்களுக்கு தனியார் வகுப்புகள் நடத்துவதை தவிர்க்குமாறு அனைத்து இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர்கள் சங்கம் தனியார் வகுப்பு ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் பல்கலைகழகங்களுக்கு விடுமுறை வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரத்தை அரசாங்கம் துணை வேந்தர்களிடம் வழங்கியுள்ளது.
மேலும் வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.
Related posts:
காணாமல்போனோரின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக புதிய வேலைத்திட்டம்!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
பேருந்துகளுக்கான தண்டப்பணம் 5 இலட்சம் வரை உயரும் - அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை!
|
|
|


