கடும் வறட்சி: நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் விநியோக மற்றும் வடிகால் அமைப்பு சபை!
Thursday, March 12th, 2020
குடி நீரை அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம் என்று நீர் விநியோக மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளாந்தம் விநியோகிக்கக்கூடிய ஆக கூடிய நீர் விநியோகிக்கப்படுவதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு சபையின் கொழும்பு மேற்கு மற்றும் மத்திய பிரிவு பிரதிப் பொது முகாமையாளர் ரஞ்சித் சமரசிங்க பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்பொழுது பயன்படுத்தப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. பகல் வேளையில் மேட்டு நிலப்பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகிக்கம் இடம்பெறுகின்றது.
இவ்வாறான பகுதிகளில் இரவு நேரத்தில் நீரை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக நீரை சேமித்து பயன்பத்துவது மிகவும் பொருத்தமானதாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சை - பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி வெளியீடு!
மரண தண்டனை விவகாரம்: ஐ.நா செயலருக்கு ஜனாதிபதி விளக்கம்!
அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
|
|
|
பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் 3 வீதமானவர்களே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்- ஜனாதிபதி ஊடகப்பிரிவு ...
புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு, முன்னர் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...
முதலாம் தர மாணவர்களில் 33 சதவீதமானோர் கைபேசியூடான விளையாட்டுகளில் ஈடுபட்டுவரகின்றனர் - கல்வி அமைச்சி...


