விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!
Wednesday, March 4th, 2020
பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.
விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரீட்சைகளை பிற்போடுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவும் சர்வதேச சமூகமும் கருத்...
ரஷ்ய கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
|
|
|
கறுப்புச்சட்டை போட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்காக பெற்றுக்கொடுத்தது என்ன? - ஈ.பி.ட...
தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கவே சுமந்திரன் விரும்புகிறார் - முன்னாள் அம...
வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு புடவைகளை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் - கல்வி அமைச்சர் சுசில் பிரே...


