சட்டப்படி வேலை செய்யும் ஆசிரியர்கள் !
Thursday, February 27th, 2020
6 அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை இன்று (27) முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
அதேபோல் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐந்து நாட்கள் பணிபகிஸ்கரிப்பை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட சுகயீன விடுமுறை போராட்டம் வெற்றியளித்தாகவும் மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.
Related posts:
கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனா? சுமந்திரனா? - சந்தேகத்தில் அரசாங்கம்!
பொலித்தீன் தடை: தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்மாதிரியாக உள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
|
|
|


