ஓமந்தையில் கோர விபத்து – 5 பேர் பலி!
Monday, February 24th, 2020
ஓமந்தை – பன்றிக்கெய்தகுளம் ஏ 9 பிரதான வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (23) இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விபத்தில் காயமடைந்த 20 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த பேருந்தும் வவுனியாவில் இருந்து வந்த வானுமே நேருக்கு நேர் மோதியுள்ளன. இதன்போது பேருந்தும் வேனும் தீ பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தார்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பற்றிய வாகனங்கள் தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டு வரும் நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
கார்த்திகைத் திருநாள் இன்று!
மீண்டும் புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க!
|
|
|


