ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா வைரஸ் !
Tuesday, February 11th, 2020
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 6வது மலேசிய பிரஜையாக இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்படி வைரஸ் 17 பேர் இதுவரையில் மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் மெகோவோவில் பணிபுரிந்து வந்த 31 வயதுடைய இவர் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மலேசியாவிற்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஹொங்கொங் நாட்டைச் சேரந்த ஒரே குடும்பத்தின் 9 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் லுனா நகரில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அனைவரும் ஒன்றாக உணவு உட்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
4.7 ட்ரில்லியன் கடன்கள் குறித்த எந்த கணக்காய்வும் நடத்தப்படவில்லை!
கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மேல் மாகாணத்தை முடக்குங்கள் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரச...
அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ஜனாதிபதி!
|
|
|


