செல்வச்சந்நிதி கேணியில் சிறுவன் சடலம் மீட்பு!
Tuesday, January 28th, 2020
தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(28) காலை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம் இருப்பது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
Related posts:
தொடரும் சீரற்ற காலநிலை: டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல்...
இலங்கையில் அமெரிக்க டொலர் சார்ந்த் பொருளாதாரத்தை குறைப்பதற்கான நகர்வுகளில் அரசாங்கம் நடவடிக்கை!
|
|
|


