பரவும் நோய் தொடர்பில் சுகாதார பிரிவின் முக்கிய அறிவிப்பு!
Friday, January 10th, 2020
தற்போது பரவிவரும் காய்ச்சல், இருமல், தடிமன் என்பன சாதாரண நோய் அறிகுறி எனவும் புதிய வைரசால் ஏற்பட்ட அடையாளம் தெரியாத நோய் அல்லவெனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்ப்ளுவென்சா நோய் பரவியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் சுகாதார அமைச்சினால் வெளயிடப்பட்ட ஒன்று அல்லவென்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் பருவப்பெயர்ச்சி மழையுடன் இன்ப்ளுவென்சா நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.
எனினும் கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதம் குறைந்தளவிலான நோயாளர்களே பதிவாகியிருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
மாலைத்தீவிலிருந்து அனுப்பப்பட்ட கைதிகளில் காணாமற்போன 3 தமிழ் இளைஞர்கள் !
மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!
வலி வடக்கின் வலிகள் வடக்கெங்கும் விரிவடைகின்றது - விரைவில் போராட்டத்தின் வடிவும் மாற்றப்படும் - மயில...
|
|
|


