எரிமலை சீற்றம்: விமானங்களுக்கு எச்சரிக்கை!
Friday, January 10th, 2020
அலாஸ்காவில் உள்ள எரிமலை சீற்றத்தால் ஏற்பட்ட கரும்புகையால், அந்த வழியாக விமானங்கள் செல்வதை தவிர்க்குமாறு விமான போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எரிமலை வெடித்துச் சிதறியதால் கிளம்பிய கரும் புகை வானில் சுமார் 8 கிலோ மீட்டருக்கு பரவிய நிலையில், வான்வெளியில் புகை பரவியதால் அந்த வழியாக செல்லும் விமானங்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின.
இந்நிலையில், அலாஸ்கா எரிமலையை சுற்றி 8 கி.மீ.க்கு சாம்பலும் புகையும் சூழ்ந்துள்ளது. இதனால் விமானங்கள் அந்த வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என விமான போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
சூதாட்டத்தில் ஈடுப்பட்டால் மரண தண்டனை - பிரபல வீரர் ஜாவித் மியாந்தத்!
பிரான்ஸில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!
இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து!
|
|
|


