புதிய ஓடுபாதைமூலம் வருமானம் அதிகரிக்கும்!
Friday, July 22nd, 2016
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய விமான ஓடு பாதையின் ஊடாக அரசாங்கத்திற்கு நாளாந்தம் அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த ஓடு பாதை நிர்மாணிக்கப்படுவதன் ஊடாக நாளாந்தம் விமான சேவைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துக்கொள்ள முடியும் என அதன் தலைவர் ஆனந்த விமலசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் 8.5 மில்லியன் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய விமான ஓடு பாதை நிர்மாணிக்கப்படுவதன் ஊடாக அந்த தொகையை மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும் என சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் கூறியுள்ளார்.
Related posts:
மீனவர்களின் மேம்பாடு கருதி களப்புப் பகுதிகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன!
பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
குறைந்த பரிசோதனை மதிப்பீட்டால் நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை குறைவு என வெளியான செய்திக்கு சுகாதார அமைச...
|
|
|


