இன்றும் நாளையும் மழையுடனான காலநிலை தொடரும் – வானிலை அவதான நிலையம்!

Sunday, December 22nd, 2019


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் நாளையும் நீடிக்கும் எனவும், அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

Related posts:

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு இந்தியாவின் பங்களிப்பு அதிகமிருக்கும் - இலங்கைக்கான ...
மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும்வரை மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க அவதானம் செலுத்துவதாக அரசாங...
வரி அதிகரிப்பு உணவு பொருட்களின் விலைகளை பாதிக்காது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்ட...