பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்க புதிய நடைமுறை!

Saturday, December 14th, 2019


பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்க புதிய நடைமுறையை தயாரித்து அதனை உடனடியாக அமுல்படுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிகபட்டுள்ளது.

இது தொடர்பில் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்ஸ உதவி பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்னவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் கருத்திட்டத்திற்கமைய பாதுகாப்பு சேவையில் பதவி உயர்வுகளை வழங்கும் போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை ஆராய்ந்து அதற்கேற்ற புதிய முறைகளை அறிமுகப்படுத்துவது இதன் நோக்கம் எனவும் கூறப்படுகின்றது.

அதற்கிணங்க மூத்த, இளைய அதிகாரிகளிற்கிடையில் தகுதியுடைய அதிகாரிகளுக்கு முறையான பதவி உயர்வுகளை வழங்கும் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

மேலும் இந்த நடைமுறை எதிர்காலத்திலும் பதவி உயர்வுகளின் போது பின்பற்றப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பண்டிகை காலத்தில் நாட்டில் புதிய சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்த எதிர்பார்ப்பு – யாழ்ப்பாணத்தில் இராண...
25 வீதமான தனியார் பேருந்துகளில் மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது - சக்திவள அமைச்சர் உதய கம்மன்பில கு...
பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள் !

காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பரிசோதனை : இன்று மாலை முடிவுகள் ...
மின்சார கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி - அங்கீகாரம் வ...
வருடத்தின் முதல் காலாண்டு முடிவதற்குள் அரசாங்க ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு - நிதி இராஜாங்க அமைச்ச...