வெட்டுபுள்ளி முறையில் மாற்றம் – அமைச்சரவை அனுமதி!
Thursday, December 12th, 2019
பல்கலைகழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக பயன்படுத்தப்படும் வெட்டுப்புள்ளி முறையில் புதிய நடைமுறை ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அந்தவகையில் மாவட்ட ரீதியிலான முறைக்கு பதிலாக, பாடசாலை ரீதியில் வெட்டுப்புள்ளி பயன்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகின்றது.
தற்போது மாகாண, மாவட்ட மற்றும் பாடசாலை ரீதியில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வியினை வழங்குவதில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாகவே இந்த புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்துவதற்காக கல்விமான்கள் உள்ளடங்கிய குழு ஒன்றினை நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Related posts:
20 ஆவது திருத்தம் திருத்தங்களுடன் நீதி அமைச்சரால் முன்வைப்பு – நாடாளுமன்றில் கடும் வாதப் பிரதிவாதம்!
அமெரிக்காவில் உலங்கு வானூர்தி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட அறுவர் பலி!
அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் - வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிரு...
|
|
|


