அரசாங்க புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நியமனம்!
Monday, December 9th, 2019
அரசாங்க புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் சுரேஸ் சலே நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் தலைமையாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில் அரசாங்க புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும்.இதேவேளை இராணுவ ஊடக பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து இராணுவ தலைமையகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
இறைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதை பிற்போடுமாறு கோரிக்கை
குளங்கள் வான் பாய்வதனால் கிளிநொச்சியில் பல பிரதேசங்களின் போக்குவரத்து பாதிப்பு!
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகளும் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்...
|
|
|


