இறந்த உறவுகளுக்காக நினைவேந்தும் உரிமையை எவரும் தடுப்பதற்கில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 27th, 2019


எமது உரிமைப் போரிலும் அதன் பின்னரான அழிவு யுத்தத்திலும் இதுவரை போராளிகள் முதற்கொண்டு பொதுமக்கள் வரை எண்ணற்ற உயிர்களை நாம் இழந்திருக்கின்றோம்.

அதனால் எமது மக்களின் ஒவ்வொரு இல்லங்கள் தோறும் இழப்புகளின் துயரங்கள் இருந்து வருகின்றது. அந்தவகையில் இறந்த உயிர்களை நினைவேந்துவது ஒவ்வொரு சாதாரண குடி மக்களதும் ஆழ்மன விருப்பங்களாகும் என்பதுடன் அது அந்தக் குடிமக்களின் ஜனநாயக உரிமையுமாகும் என கடற்றொழில் நீரியல் வள மூலதன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் –

சக போராளிகளினதும் பொது மக்களினதும் இறப்புகள் நிகழ்ந்தபோது அதைவைத்து அரசியல் ஆதாயம் தேடலாம் என ஆனந்தக் கூத்தாடி மகிழ்ந்தவர்களே இன்று உறவுகளை நினைவேந்தும் நிகழ்வுகளில் கூடி நிற்கின்றார்கள். இவர்கள் குறித்த மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அமைதியானதும் சமாதானமானதுமான முறையில் மக்கள் அனுஸ்டிக்கும் நினைவேந்தலை துஸ்பிரயோகம் செய்து அதில் அரசியல் ஆதாயம் தேட அவர்கள் முற்படுவார்கள். இத்தகைய துஸ்;பிரயோகங்களுக்கு எமது மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என நம்புகின்றோம்.

அரசியல் துஷ்பிரயோகங்கள் இன்றி இறந்த உயிர்களை தமது ஆழ்மனங்களில் நினைவேந்தி அஞ்சலி செலுத்தும் எமது மக்களின் உரிமையை யாரும் தடுக்க மாட்டார்கள். மக்களின் உணர்வுகளுக்கும் ஆழ்மன விருப்பங்களுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் என்றும் மதிப்பளிப்போம்.

இறந்து போன அனைத்து உயிர்களையும் நெஞ்சில் நினைவேந்தி அஞ்சலி மரியாதை செலுத்துகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

வடக்கில் கடற்றொழில் மேம்பட்டால்  பொருளாதாரத்திற்கு பங்களிப்பாக அமையும் - டக்ளஸ் தேவானந்தா!
மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்தால் அதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்கும் - டக்ளஸ் தேவானந்தா எம்....
கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின சிறப்பு பூஜை வழி...

கடற்றொழிலாளர்களுக்கு 55 அடி நீளமான படகுகளை 50 வீத மானிய விலையில் வழங்கப்படுவது தொடர்பில் குழப்ப நில...
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது – ஊடகக் செய்தியில் அமைச்ச...
கச்சதீவு ஒப்பந்தத்தால் கச்சதீவைப் போல் 80 மடங்கு வளம் கொண்ட“வெட்ஜ் பாங்” பகுதியை இந்தியாவுக்கு தாரைவ...