ஜனாதிபதி தேர்தல்: இரண்டாயிரம் முறைப்பாடுகள் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, October 31st, 2019


கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் 124 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, வன்முறை தொடர்பாக 2 முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 117 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏனைய முறைப்பாடுகள் 5 கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8ஆம் திகதியிலிருந்து நேற்று வரையான காலப்பகுதியில் 2138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts:

காலத்திற்கு ஒவ்வாத நிர்வாக முறைமை காரணமாக முற்போக்கான தலைமைத்துவம் செயற்பட முடியாத நிலை காணப்படுகின்...
அஸ்வெசும தொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வேண்டும் - சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம...
திருநெல்வேலி விடுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் - சிறுமியின் அம்மம்மா கொலைக் குற்றச்சாட்டி...