ஜப்பானால் இலங்கைக்கு பல மில்லியன் பெறுமதியான அம்புலன்ஸ் வண்டி நன்கொடை!
Wednesday, July 20th, 2016
ஜப்பான் – இலங்கை நட்புறவு நிறுவனம், 35 மில்லியன் பெறுமதியான நோயாளர் காவு வண்டியை (ambulance) இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து நேற்றுமுன்தினம் இந்த வண்டி வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் – இலங்கை நட்புறவு நிறுவனத்தின் உறுப்பினர் Toji Eiichi இந்த நன்கொடையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியுள்ளார்.
இதன் போதே ஜனாதிபதி இந்த வண்டியை இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஜப்பான் – இலங்கை நட்புறவு நிறுவனம் தலைவர் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் தாய்லாந்துடன் 3 ஆம் சுற்று பேச்சுவார்த்தை - ஜனாதிபதி அமைச்சரவைக...
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு!
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து ஆகியோருக்கு மரண தண்டனை உறுத...
|
|
|


