ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து – தபால் திணைக்களம்!
Friday, October 18th, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இது தொடர்பாக தெரிவிக்கையில், தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை பொறுப்பேற்பதற்கு தற்பொழுது சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்பு ஆவணம் தபால் திணைக்களத்திடம் எதிர்வரும் 25 ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது.
இவற்றை வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் தபால்மா அதிபர் தெரிவித்தார்.
அடுத்த மாதம் 3 ஆம் திகதி உத்தியோகபூர்வு வாக்காளர் அறிவிப்பு அட்டை விநியோகிப்பதற்கான விஷேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புதிய 3 அரச மருத்துவ பீடங்கள் - உயர் கல்வி அமைச்சு!
ஆசிரியர் நியமனங்களில் மாற்றமேதும் செய்யமுடியாது - கல்வி அமைச்சு!
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக எஸ். துரைராஜா நியமனம்!
|
|
|
தோழர் லிங்கேஸ் அவர்களின் புகளுடலுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் கட்சி கொடி போர்த்தி இறுதி அஞ்சலி ம...
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டாலும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது அவசியம் - சுகாதார...
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகள் முன்னெடுப்பு - பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ தெரிவிப...


