புதிய இராணுவச் சோதனைச்சாவடிகளில் பொலிஸாரையும் இணைக்க உத்தரவு – மஹிந்த தேசப்பிரிய!
Thursday, October 10th, 2019
வடக்கு, கிழக்கில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவச் சோதனைச்சாவடிகளில் பொலிஸாரையும் கடமையிலீடுபடுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
செய்தியாசிரியர்களை சந்தித்துப் பேசியிருந்த அவரிடம் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசங்களில் புதிதாக சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர், இது தொடர்பான யோசனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படும், ஆணைக்குழு இந்த யோசனையை அங்கீகரிக்கும் பட்சத்தில், ஒவ்வோர் இராணுவச் சோதனைச் சாவடியிலும் பொலிஸாரையும் பணியில் அமர்த்தப்படும்.
புதிதாக சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டால் அதில் பொலிஸாரையும் கடமையில் ஈடுபடுத்துவதே சாலச் சிறந்தது என்றார்.
Related posts:
ஊழலை ஒழிக்க தேசிய செயற்திட்டம் - நீதி அமைச்சர் தலதா அத்துகோரள!
ஜனாதிபதி தேர்தல்: 14 வேட்பாளர்கள் களத்தில் - தேர்தல்கள் ஆணைக்குழு!
பாடசாலைகளை தற்போதைக்கு மீள திறக்கக் கூடாது - ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மாலவிகே...
|
|
|


