தொடர்கிறது பணிப்புறக்கணிப்பு – இன்று பேச்சுவார்த்தை!
Monday, September 30th, 2019
ரயில் தொழிற்சங்கங்கள் கடந்த 24ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று(30) ஐந்தாவது நாளாகவும் தொடர்வதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரயில் தொழிற்சங்கம் உட்பட மேலும் இரண்டு தொழிற்சங்கங்களுடன் இன்று(30) பிற்பகல் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், தமக்கு சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை, தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவதாக ரயில் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
இன்றுமுதல் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகம்!
ஏப்ரல் முதலாம் திகதி முதல் அரிசி விலை குறைப்பு - விவசாய அமைச்சு அறிவிப்பு!
வடமராட்சியில் பட்டம் ஏற்றும் திருவிழா பணிகள் ஆரம்பம்!
|
|
|


