பலாலி விமான நிலையத்திற்கான வீதி புனரமைப்பு துரிதகதியில் !

Wednesday, September 25th, 2019


யாழ்.பலாலி விமான நிலையத்திற்கான வீதி காப்பெற் வீதி புனரமைப்பு செய்யும் பணிகள் தற்போது துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது.

பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் மேற்குப் புறமாக மாற்றப்படுவதால் தெல்லிப்பளை சந்தியில் இருந்து வைத்தியசாலை வீதியூடாக கட்டுவன் சந்தி -கட்டுவன்- மயிலிட்டி வீதி காப்பெட் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.விமான நிலையத்தின் நுழைவாயில் மயிலிட்டி வடக்கில் அமைகின்றது.

அத்துடன் மிகவும் அகலமான நுழைவாயிலாக விமான நிலைய வீதி அமைவதுடன் அங்குள்ள இராணுவ முட்கம்பி வேலியும் அகற்றப்படவுள்ளது.

மேலும் கட்டுவன் மயிலிட்டி வீதியில் கிராமக்கோட்டு சந்திக்கு முன்பாக உள்ள இராணுவ முட்கம்பி வேலி வீதியை அபகரித்து இராணுவத்தினர் 400 மீற்றர் தூரத்துக்கு மக்களின் காணியில் தூண் அமைத்துள்ளனர்.இந்த நிலையில் குறித்த வேலியையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை கட்டுவன் மயிலிட்டி வீதி கடந்த ஆண்டு இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மோட்டார் போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ள 7 புதிய மாற்றங்கள் - அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவி...
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை - வானிலை அ...
நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு - இலங்கை மின்சார சபை தெர...