திருமலை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு – ஜனாதிபதி சிறப்புப் பரிசு!
Thursday, September 19th, 2019
இலங்கையில் பாடசாலை மாணவன் ஒருவரின் அபூர்வ கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசு வழங்கியுள்ளார்.
ஒருவர் எழும்பி நடக்கும் போது பட்டரி ஒன்று சார்ஜ் ஆகும் உபகரணம் ஒன்றை மாணவன் தயாரித்துள்ளார். அதற்கு “Walking charger” என பெயரிட்டுள்ளார்.
திருகோணமலை, தன்தலாவ மஹா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்று வரும் சத்துர மதுமால் என்ற மாணவன் இதனை தயாரித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி ஐந்து இலட்சம் பரிசு வழங்கியுள்ளார். இது தொடர்பான நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளை சத்துர மதுமால் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயன்படுத்தபட்ட முக்கவசங்கள் மீண்டும் விற்பனைக்கு? எச்சரிக்கும் சுகாதார தரப்பு!
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிக்க் வாய்ப்பு - பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் த...
வடக்கின் கல்விப்புலத்தில்என்றுமில்லாதளவு அரசியல் தலையீடு - இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
|
|
|


