மோட்டர் சைக்கிள் சாரதிக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம்!
Wednesday, September 18th, 2019
பலங்கொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதி பத்திரம், வரி செலுத்திய சான்றிதழ் மற்றும் வாகன அனுமதி பத்திரம் இன்மை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று பலங்கொட நீதவான் ஜயருவன் திஸாநாயக்கவின் உத்தரவின் பேரில் அவருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பலங்கொட கல்தொட்டை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான இளைஞனே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
Related posts:
பதிவுகள் மேற்கொண்டாலே மீனவர்களுக்கு இழப்பீடுகள் - யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் !
மருத்துவர்களினால் அரசாங்கத்திற்கு 20 கோடி ரூபா நஷ்டம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
அச்சுவேலி வல்லையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குடும்ப பெண் கைது!
|
|
|


