வெங்காய உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி…!

Tuesday, September 17th, 2019


பெரிய வெங்காய பயிர் செய்கையினால் உற்பத்தியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க இலாபம் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அண்மையில் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, உள்ளூர் உற்பத்தியாளர்கள் அதிக இலாபம் அடைந்துள்ளனர். உள்ளுர் சந்தையில் சிறந்த விலை கிடைப்பதாக கூறப்படுகிறது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 105 ரூபா முதல் 110 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக உள்ளுர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கெட்டலவ, கொக்கவெல, கிவுலேகட மற்றும் மிஹிந்தலை ஆகிய பகுதிகளில் பெரிய வெங்காயம் வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தில் 1700 ஏக்கரில் பெரிய வெங்காயம் செய்கையிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts:

நீதிபதிகளின் அறிவு மற்றும் திறன்களை அதிகரிப்பதற்காக நீதித்துறை பயிற்சி கல்லூரியை நிறுவுவதற்கு அமைச்ச...
சாரதி அனுமதிப் பத்திரங்கள் அடுத்த வாரம் முதல் மீண்டும் அச்சிடப்படும் - மோட்டார் போக்குவரத்து திணைக்க...
தேர்தலை ஒத்திவைக்குமாறு IMF பரிந்துரை செய்யவில்லை - வரிச் சீர்திருத்தம் மிக அவசியம் - சர்வதேச நாணயந...

உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகூடிய அதிகாரம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை - பிரதமர் தினேஸ் குணவர்தன தெரி...
எக்பிரஸ் பேர்ள் கப்பல் இழப்பீடு தொடர்பான வழக்கை மாற்றுவதற்கு நடவடிக்கை : நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக...
சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் மத அவதூறு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனி பிரிவு – பதில் ...