ஏப்ரல் 21 தாக்குதல்: 64 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
Saturday, August 31st, 2019
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமையகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 12ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.
Related posts:
திலீபனின் நினைவுகள் அரசியல் சுயலாபங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது - சபையை புறக்கணித்து ஈ.பி.டி.ப...
பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் அரச வைத்தியர்கள்!
அமெரிக்க வான் பரப்பில் பறந்தது உளவு பலூன் அல்ல - ஆகாயக் கப்பல் - சீனா விளக்கம்!
|
|
|


