PHI கெடுபிடி : உள்ளூர் உற்பத்திகள் முடக்கம் – உற்பத்தியார்கள் பெருங் கவலை!

Thursday, August 29th, 2019

யாழ்ப்பாணம் மற்றும் தீவகங்களில் PHI கெடுபிடியால் பல உள்ளூர் உற்பத்திகள் முடங்கி விட்டதாக பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் , தீவகம் , மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் செய்யப்படுகின்ற உள்ளூர் உற்பத்திகளான பருத்தித்துறை வடை, முறுக்கு, எள்ளுப்பாகு , வேப்பம் பூ வடகம் போன்ற சிறு வாழ்வாதார உற்பத்திகளை சுகாதாரத்துடன் தான் காலா காலமாக செய்து வந்த நிலையில் அவர்களின் உற்பத்திகளால் யாருக்கும் எந்த நோயும் ஏற்பட்டதில்லை.

இந்நிலையில் PHI கெடுபிடியால் அவர்களின் உற்பத்திகள் குறைந்துள்ளதோடு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர்.

அவர்களிடம் சென்று நிலத்துக்கு மாபிள் போடு, , சுற்றிவர கண்ணாடி பிற்றிங் அடி, மேல சீற் போடு என்று சொன்னால் பாவம் அவர்கள் எங்கே போவார்கள் என பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சுகாதாரம் எனும் போர்வையில் தேவையற்ற அளவுக்கதிகமான கெடுபிடிகளால் உள்ளூர் உற்பத்திகள் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதோடு, அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனால் வடபகுதி மக்களின் கைத்தொழில் உற்பத்திகள் குறைந்த நிலையில் தென்னிலங்கையர்களின் உற்பத்திப்பொருட்களே அதிகமாக விற்பனையாவதாகவும் பலரும் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாம் அதிகாரத்தில் இருந்த போது வடக்கில் சமூகச் சீர்கேடுகள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது - ஈ.பிடி....
வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகள் தொடர்பில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை – யாழில் இராஜாங்க அமைச்சர் அ...
உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை - தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய நியம...

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளும் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்ய வாய்ப்பு - தேர்தல் ஆணைக...
குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது - தேசிய நோய்த்தடுப்பு பிரிவின் பணிப்பாள...
உடன் அமுலாகும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு - அமைச்சரவைப் பத்த...