சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் – பரீட்சைகள் ஆணையாளர்!
Monday, August 26th, 2019
நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான ஒழுங்குகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சை இம்முறை பரீட்சைக்கு முன்னதாக அடுத்த மாதம் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்கு புதிய நடைமுறை அறிமுகம்!
கொழும்பில் பதற்றம் - உடன் அமுலாகும் வகையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்!
தமி்ழ், முஸ்லீம் கட்சிகளை இணைத்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படும். - வெளிவிவகார அமைச்சர் விஜித ஹரத் தெ...
|
|
|


