லெகிமா சூறாவளி – சீனாவில் 13 பேர் பலி!
Sunday, August 11th, 2019
சீனாவின் செஜியாங் மாகாணத்தை லெகிமா என்ற சூறாவளி புயல் தாக்கியுள்ளது. நேற்று நள்ளிரவு 1.45 மணியளவில் லெகிமா சீனாவில் நிலைக் கொண்டுள்ள லெகிமா சூறாவளி காரணமாக இதுவரை 13 பேர் பலியாகினர்.
சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு காரணமக பலர் சிக்குண்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்சரிவில் சிக்குண்டவர்களில் இதுவரை 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. சூறாவளி காரணமாக மரங்கள் முறிந்துள்ளதுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் சில பகுதிகளில் மணித்தியாலயத்திற்கு 187 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அடாவடி: அதிருப்தியில் நெடுந்தீவு மக்கள் ஒன்று திரண்டு போராட்டம...
குறுகிய கால கஷ்டங்கள் ஏற்பட்டாலும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ த...
ஆயுர்வேத திணைக்களம் ‘ஸ்பா’க்களுக்கு உரிமம் வழங்குவதில்லை - சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக...
|
|
|


