வெள்ளவத்தையில் கடும் மோதல் – பொலிஸார் உட்பட பலர் காயம்!
Monday, August 5th, 2019
நேற்றிரவு வெள்ளவத்தையில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் 3 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தற்போது வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடப்படுகின்றது.
இந்த மோதல் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தை மயூரா வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு முன்னால் நேற்றிரவு மோதல் சம்பவம் ஏற்பட்டது. கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபடும் குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கடும் மோதலாக மாறியிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்தில் அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வகுப்புத்தடையை நீக்கக்கோரி பல்கலை மாணவர்கள் போராட்டம்!
பொறுப்பற்று செயற்படுகின்றது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் - தேசிய கணக்காய்வு அலுவலகம் குற்றச்சாட்டு...
ஜனாதிபதி தேர்தல் - அரச செலவில் உலங்குவானூர்திகள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை !
|
|
|


