புர்கா ஆடைகள் குறித்து அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்!
Wednesday, July 31st, 2019
இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்கா ஆடைகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கான பத்திரத்தைக் கையளித்துள்ள நிலையில், அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலையடுத்து முகம் மூடும் வகையிலான ஆடைகள் அணிவதற்கு தடை விதிப்பதாக தெரிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த தடையை தற்போது நிரந்தரமாக்கும் முயற்சியின் அடிப்படையாக இவ் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அரச ஊடகங்களை மக்கள் சேவை ஊடகங்களாக மாற்ற நடவடிக்கை!
கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் எக்சிம் வங்கி இணங்கியமை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது - மத்தி...
நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவு - அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப...
|
|
|


