பிரதமர் விசேட தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியம்!
Monday, July 29th, 2019
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியமளிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ம் திகதி அழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்திருந்தார்.
அன்றைய தினம் சில அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, அமைச்சரவை அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோரே இவ்வாறு சாட்சியம் அளிக்கவுள்ளனர்.
Related posts:
அரிசியின் விலை குறைகின்றது? - அமைச்சர் மஹிந்த அமரவீர!
சஜித்தின் கட்டுப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி இல்லை - 02 மர்ம நபர்களின் கீழேயே இருக்கிறது - உள்ளதாக ...
மண்டைதீவு கிரிக்கெட் மைதானம் போன்று நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையமும் ஏமாற்றம் அளிக்க கூடாது – ...
|
|
|


