நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!
Tuesday, July 23rd, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் நாளைய(24) சாட்சிப் பதிவுகளின் போது ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவுக் குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஜே.எம்.ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
நாளை(24) இடம்பெறவுள்ள தெரிவுக் குழுவின் சாட்சியங்களுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானிகள் ஐவர் அழைக்கப்பட்டுள்ளமையினாலேயே ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பம்!
அலுக்கோசு பதவிக்காக இரண்டுபேர் தெரிவு!
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை மிகவும் சிறந்ததாக மாற்ற முடியும் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய த...
|
|
|


