பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!
Friday, July 19th, 2019
ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியும் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர் தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர் தரப்பரீட்சைக்கு அமைவான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்களுக்கு எதிர்வரும் 30 ஆம் திகதியின் பின்னர் பரீட்சை முடியும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை குறித்த மேலதிக வகுப்புக்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி நிறைவுறுத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Related posts:
சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதன் காலமானார்.
நுகர்வோருக்கு பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கப்படும் - வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துவத...
நெடுந்தீவுக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது!
|
|
|


