இந்திய விமானங்கள் பயணிப்பதற்கு வான்வழியை திறந்தது பாகிஸ்தான்!
Tuesday, July 16th, 2019
பாகிஸ்தான் வழியாக இந்திய விமானங்கள் பயணிப்பதற்காக பாகிஸ்தான் தனது வான்வழியை திறந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக தனது வான்வழியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது.
இந்நிலையில், கர்தார்பூர்-குருத்வாரா ஆகிய இடங்களுக்கு இடையே வான்வழியை திறந்து விடுவது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், தனது வான்வழியையும் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் திறந்துவிட்டுள்ளது.
Related posts:
முஸ்லிம் தடை குறித்த வாசகங்கள்: டிரம்ப் வலைத்தளத்திலிருந்து தற்காலிக நீக்கம்!
உலகின் மிக உயரமான சிலை இந்தியாவில்!
600 இலங்கையர்களை பலியெடுத்த கத்தார் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - 439 பேருக்கு நட்டஈடு வழங்கப்பட்டதாக...
|
|
|


