சில நாட்களில் வானிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்!
Tuesday, July 9th, 2019
இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் நாட்டில் தற்போது காணப்படும் வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Related posts:
அனைத்து தரப்பினரதும் பங்களிப்பு மிக அவசியம் - இராஜாங்க அமைச்சர் டிலான்!
இயல்பு நிலைக்கு திரும்பும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் !
மதுபான போத்தல்களை மீள் சுழற்சி செயற்வதற்கு புதிய வேலைத்திட்டம் - கலால் திணைக்களம் நடவடிக்கை!
|
|
|


