இலங்கை மின்சார சபைக்கு பாரிய நட்டம்!
Monday, July 8th, 2019
இலங்கை மின்சார சபை கடந்த நான்கு மாதத்துக்குள் அதாவது 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் 23.1பில்லியன் ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் இலங்கை மின்சார சபைக்கு 17.5 பில்லியன் ரூபாய் மாத்திரமே நட்டம் ஏற்பட்டுள்ளது என்றாலும் அது தற்போது 5 பில்லியன் ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நட்டத்திற்கு காரணம் முக்கியமாக வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் உட்பட்ட பல்வேறு விடயங்கள் ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தில் இருந்து மாத்திரம் 103.1 பில்லியன் ரூபாய் வருமதியாக மின்சார சபைக்கு வர வேண்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
நாட்டின் அபிவிருத்திக்கு உதவித் தொகையை அதிகரித்தது இந்தியா!
கொரோனா அச்சுறுத்தல்: மூன்று நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை!
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் - ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாக தகவல்!
|
|
|


