சட்டத்தை இரத்து செய்ய வேண்டாம் – 19ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் பெபரல்!
Monday, June 24th, 2019
19ஆம் திருத்தச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டாம் என இலங்கையின் முன்னிலை தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களில் ஒன்றான பெபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட காரணிகளின் அடிப்படையில் 19ஆம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தால் நாட்டுக்கு அது பொருத்தமாக அமையாது என சுட்டிக்காட்டியுள்ளது.
19ஆம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யாது அதில் திருத்தங்களைச் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. நல்ல அரச ஆட்சியொன்றை முன்னெடுப்பதற்கு 18 மற்றும் 19ஆம் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென நேற்று ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி, 19ஆம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
ஜனாதிபதியால் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியீடு!
நாட்டின் வளர்ச்சி அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக மட்டுமே இருக்க முடியும் - ஜனாதிபதி செயலணியின் த...
ஒன்லைன் கடவுச்சீட்டு - சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உள்ள இயந்திரம் கடந்த இரு வாரங்களாகப் பழுதடைந...
|
|
|


