பொலிஸ்மா அதிபர் உயர் நீதிமன்றில் ஆயர்!
Monday, June 24th, 2019
கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலையாகியுள்ளார்.
தான் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பிலேயே அவர் உயர்நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியது சட்டவிரோதம் என கூறி பூஜித் ஜயசுந்தர கடந்த மாதம் 29ஆம் திகதி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவில் அரசியலமைப்பு சபை உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவர்கள் விரும்பிய கடைகளில் சீருடைக் கொள்வனவு செய்யலாம்!
மானிப்பாயில் மற்றொரு ஆவாக் குழுவின் முக்கியஸ்தர் மாட்டினார்!!
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்குப் பொருளாதார ரீதியான அசௌகரியங்கள் அதிகரித்தால், ஏழைகள் வீதிக்கு இறங்...
|
|
|


